சித்திரை முழுநிலவு திருவிழா: பச்சை பட்டு உடுத்தி அருள் பாவித்த மங்களநாயகி
கண்ணகி கோயில் (பைல் படம்).
தேனி மாவட்டம், கூடலூர் அருகே, விண்ணேற்றிப் பாறை மலை உச்சியில் மங்களநாயகி கண்ணகிக் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று, சித்திரை முழுநிலவு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை முழுநிலவு திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை, தேனி மாவட்ட நிர்வாகமும், இடுக்கி மாவட்ட நிர்வாகமும் செய்துள்ளது. கண்ணகி கோவிலுக்கு, பக்தர்கள் கேரளாவின் குமுளியில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் வனப் பாதை வழியாக நடந்தும், ஜீப் மூலமாகவும், சென்று வருகின்றனர். அதேபோல் தமிழகத்தின் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பளியங்குடியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரம் நடந்தும் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, போக்குவரத்து, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1,500க்கும் மேற்பட்ட இரு மாநில போலீசார் பாதுகாப்பு பணியிலும், இரு மாநில வனத்துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மங்கள தேவி கோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட கண்ணகி அம்மன் பச்சை நிறப் பட்டு உடுத்தி, பக்தர்களுக்கு அருள் புரிந்தார். இதில், தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று கண்ணகி அம்மனை வழிபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu