பழைய வாகனங்களை ஏலம் விட்டு கருவூலத்தில் தொகையை சேருங்கள்: தலைமை செயலாளர் உத்தரவு

பழைய வாகனங்களை ஏலம் விட்டு கருவூலத்தில் தொகையை சேருங்கள்:  தலைமை செயலாளர் உத்தரவு
X

அரசுக்கு சொந்தமான இடங்களில் பழைய வாகனங்கள் பயன்பாடில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது 

அரசு அலுவலகங்களில் நிறுத்தப்பட்டுள்ள பழைய பயன்பாடில்லாத வாகனங்களை ஏலம் விட்டு அந்தத் தொகையை அரசு கருவூலத்தில் சேர்க்கும்படி தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

பயன்பாடு இல்லாமல் அரசு அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையை அரசு கருவூலத்தில் சேர்க்குமாறு தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மாட்ட ஆட்சியர்களுக்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து ஓர் அறிவிப்பையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு அவர் அனுப்பி வைத்திருக்கின்றார். அதில், "அரசு அலுவலகங்கள் அல்லது அரசுக்கு சொந்தமான இடங்களில் பழைய வாகனங்கள் பயன்பாடில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.

அவை (வாகனங்கள்) ஏன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன? என விசாரித்ததில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. குறிப்பாக, அந்த அலுவலகத்தின் அரசு பணியாளர்களுக்கே அதுகுறித்த தகவல் தெரிவதில்லை. ஆகையால், இதுபோன்று இடங்களை அடைத்துக் கொண்டு, மேலும் பாழாகிக் கொண்டிருக்கும் வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

அதன்மூலம் கிடைக்கும் வருவாயை அரசின் கருவூலத்தில் சேர்க்க வேண்டும். அமலாக்கத் துறைகளின் அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை, அதன் மீதிருக்கும் வழக்குகளை உடனடியாக முடித்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகப்படியான வெயில், மழை ஆகியவற்றால் வாகனங்கள் மேலும் சேதமடைந்து வருகின்றன. இதனால், அவற்றின் மதிப்பு மிகக் கடுமையாக குறைந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில், அவை ஏலத்திற்கு போகுமானால், அவற்றின் மதிப்பு பல மடங்கு குறையும் வாய்ப்பு இருக்கின்றது.

இதனால், அரசின் வருவாயும் பாதிக்கின்றது. ஆகவே, அரசு அலுவலகங்களில் பழைய, பயன்பாடற்று நிற்கும் வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story