/* */

வேதபாராயணர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை தொடங்கி வைத்தார் முதல்வர்

அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.3000/- உதவித்தொகை

HIGHLIGHTS

வேதபாராயணர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை தொடங்கி வைத்தார் முதல்வர்
X

வேதபாராயணர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை தொடங்கி வைத்தார் முதல்வர்

அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் ஆகிய பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.3000/- உதவித்தொகை வழங்கும் திட்டம் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24.12.2021) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை சார்பில் அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் (தவில், நாதஸ்வரம்) ஆகிய பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,000/- ஊக்கத் தொகையை ரூ.3,000/- ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை, 18 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி, தொடங்கி வைத்தார்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் (தவில், நாதஸ்வரம்) ஆகியோருக்கு பயிற்சிக் காலத்தில் ஏற்கனவே ரூ.1,000/- ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, அந்த ஊக்கத்தொகை ரூ.3,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் வேதபாராயணர் பள்ளிகளில் பயின்று வரும் 18 மாணவர்கள், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயின்று வரும் 24 மாணவர்கள் மற்றும் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தவில் / நாதஸ்வர பயிற்சி பள்ளிகளில் பயின்று வரும் 25 மாணவர்கள், என மொத்தம் 67 மாணவர்கள் பயன்பெறும் வகையில், உயர்த்தப்பட்ட உதவித்தொகையான 3,000/- ரூபாயினை 18 மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி, தொடங்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 24 Dec 2021 10:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.