தமிழகத்தை பிளவுபடுத்தும் சக்திகள்: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

தமிழகத்தை பிளவுபடுத்தும் சக்திகள்: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
X

தமிழக முதல்வர் ஸ்டாலின்.

தமிழகத்தை பிளவுபடுத்தும் சாதி, மத சக்திகளை புறக்கணிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது, தமிழக அரசு திராவிட மாடல் அரசாக செயல்பட்டு வருகிறது எனவும், இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழகத்தில் இருந்து எழுதப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் சரித்திரத்தில் தமிழர்களுக்கு பெருமை இருப்பது சான்றுகளால் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்றும் வெளி நாடு வாழ் தமிழர்களுக்கு என சட்ட உதவி மையம் அமைக்கப்படும் எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தை பிளவுப்படுத்தும் சாதி, மத சக்திகளை புறக்கணிக்க வேண்டும் எனவும், இறை நம்பிக்கை அவரவர் உரிமை என்றும் தலையிட மாட்டோம் எனவும் முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். சாதியையும், மதத்தையும் தாண்டி செயல்பட வேண்டும் எனவும், அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Tags

Next Story
ai based agriculture in india