பண்ணைபுரத்து நாயகன் இசைஞானிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்..!
பண்ணைபுரத்து இசைக்குயில் இளையராஜா.
நாடு முழுவதும் கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராகேஷ் சின்கா உள்பட 5 பேர் நியமன எம்.பி.க்களாக உள்ளனர். மேலும் காலியாக உள்ள இடங்களுக்கு எம்.பி.க்களை நியமனம் செய்ய மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
தமிழகத்தில் தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்தவர் இசைஞானி இளையராஜா. தமிழ்ச்சினிமா மூலம் கிராமத்து இசையை உலகம் எங்கும் கொண்டு சென்றவர். இவரை மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்து உள்ளது. இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன பதவி வழங்கியிருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட செய்தியில், இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்டவர் இசைஞானி' இளையராஜா. நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராக சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள் என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu