புயல் எச்சரிக்கை அறிவிப்பால் முதல்வர் ஸ்டாலினின் 3 நாள் நிகழ்ச்சிகள் ரத்து
முதல்வர் ஸ்டாலின்.
புயல் எச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது மூன்று நாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக உருமாறி இருப்பதால் தமிழகத்தில் டிசம்பர் 2ஆம் தேதி புயல் தாக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையமும் சென்னை வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்டங்களை நோக்கி நகரும் இந்த புயல் ஆந்திராவை தாக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக புயல் தாக்க கூடும் என எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு செய்துள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் தயார் நிலையில் இருக்கும்படி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 2 ,3 ,4 ஆகிய மூன்று நாட்கள் முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மழை தொடர்பாக ஒரு பதிவினை செய்துள்ளார்.
அதில் புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனை நடத்தி கூறிய அறிவுரைகளை வழங்கியுள்ளேன். புயல் மழையை எதிர்கொள்ள அரசு அதிகாரிகள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு துறை அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு களத்தில் நின்று நேரடியாக உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu