போர் நினைவு சின்னத்தில் மலரஞ்சலி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்

போர் நினைவு சின்னத்தில் மலரஞ்சலி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்
X

சென்னை, காமராஜ் சாலையில் அமைந்துள்ள போர் நினைவு சின்னத்தில், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

உயிர்தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவுகூறும் வகையில், போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.12.2021) சுவர்னிம் விஜய் வர்ஷ் (Swarnim Vijay Varsh) 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுடனான போரில், இந்தியா வெற்றி பெற்றதன் பொன்விழாவை முன்னிட்டு சென்னை, காமராஜ் சாலையில் அமைந்துள்ள போர் நினைவு சின்னத்தில், தாய்திருநாட்டிற்காக உயிர்தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவுகூறும் வகையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அடுத்து பதிவேட்டில் கையொப்பமிட்டார்.


நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, பொதுத் துறை செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன், ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் அ. அருண் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture