சித்தா, ஆயுர்வேதா மருத்துவர்கள் 130 பேருக்கு பணி நியமன ஆணை.. முதல்வர் ஸ்டாலின் வழங்கல்...
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சித்தா, ஆயுர்வேதா மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி மருத்துவத்தின் செயல்பாட்டினை மேலும் மேம்படுத்தும் வகையில், மருத்துவப்
பணியாளர் தேர்வு வாரியத்தால் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் கீழ் இயங்கும், இந்திய மருத்துவப் பிரிவு உள்ள அரசு தலைமை மருத்துவமனைகள்,
அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருந்தகங்களில் காலியாக உள்ள உதவி மருத்துவ அலுவலர்கள் (ஆயுஷ்) பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு சென்னையில் இரண்டு மையங்களில் அதற்கான தேர்வுகள் நடைபெற்றது.
அதன்படி, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 130 சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கு
உதவி மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நேரடியாக 5 சித்தா உதவி மருத்துவர்கள், 5 ஆயுர்வேதா உதவி மருத்துவர்கள், 5 ஓமியோபதி உதவி மருத்துவர்கள், என 15 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையில் தமிழ்நாடு முழுவதும் 1.541 சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை பிரிவுகள் உள்ளன. இதன்மூலம் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை, மக்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ சேவையாற்றி வருகிறது. கொரோனா தொற்று காலங்களில், சித்தா மருத்துவ பிரிவுகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
மேலும், தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின்போது, 79 சிறப்பு சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு, அந்த மையங்களின் வாயிலாக சுமார் 70,000 மக்கள் பயன் அடைந்துள்ளனர் என அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu