தேர்தல் வாக்குறுதி 70 சதவீதம் நிறைவேற்றியதாக, முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவையில் நடந்த திருமண விழாவில் பேசினார்.
MK Stalin Chief Minister -கோவை கொடிசியா வளாகத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்கள் ஸ்ரீநிதி - கெளசிக் தேவ் ஆகியோருக்கு மாலை எடுத்து கொடுத்து, திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இது ஒரு சீர்த்திருத்தம் மற்றும் தமிழ் திருமணமாக நடைபெற்றது. 1967ம் ஆண்டு அண்ணா முதல்வராக பொறுப்பேற்ற காலத்தில் சீர்த்திருத்த திருமணம் சட்டப்படி செல்லும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி. திமுக ஆட்சி அரசியல் ஆட்சி கிடையாது. இபிஎஸ் தொகுதியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினையை தீர்த்து வைக்கிறோம். 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம், எஞ்சிய 30 சதவீத வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம்.
மக்கள் என்னிடம் மனு கொடுத்துவிட்டு நன்றி என்று சொல்கின்றனர். மனு மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே அவர்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுத்துள்ளோம். இது தான் திராவிட மாடல் ஆட்சி. நிதிப்பிரச்சினையை சீரமைத்த பின் மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் ரூ 1000 விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu