/* */

மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்

முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், ஒரு வாரம் வீட்டில் முழு ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்
X

முதல்வர் ஸ்டாலின் (பைல் படம்)

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். உடனே அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். ஆனால் சளி, இருமல் குறையாததால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள். அவருக்கு நுரையீரலில் 10 சதவீத அளவுக்கு சளி பாதிப்பு இருந்ததை கண்டறிந்தனர். உடனே மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சைகள் மேற்கொண்டனர்.

இதில் அவரது உடல்நிலை தேறி வந்தது. முழுமையாக குணம் அடைந்ததைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் மேலும் ஒரு வாரம் வீட்டில் முழு ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

Updated On: 19 July 2022 6:05 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?