தமிழ்த்தாத்தா உ.வே.சா 168-வது பிறந்தநாளில் முதல்வர் புகழாரம்

தமிழ்த்தாத்தா உ.வே.சா 168-வது பிறந்தநாளில் முதல்வர் புகழாரம்
X

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் 168-வது பிறந்தநாளையொட்டி இன்று (19.2.2022) தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அவருடைய திருவுருவப்படத்திற்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வி.ப.ஜெயசீலன், தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் ப.அன்புச்செழியன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரையில் கூறியதாவது:

தமிழ்த் தொன்மையின் அடையாளங்களான சங்க இலக்கியங்கள்; சமணம், பவுத்தக் காப்பியங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பழந்தமிழ் நூல்களின் ஏட்டுச்சுவடிகளை அலைந்து திரிந்து அச்சிலேற்றித் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் நிலைபெற்றிட்ட தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் தொண்டைப் போற்றுகிறேன், என தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!