தூத்துக்குடி பிரையண்ட் நகரில் ஏற்பட்டுள்ள கனமழை சேதங்களை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்

தூத்துக்குடி பிரையண்ட் நகரில் ஏற்பட்டுள்ள கனமழை சேதங்களை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்
X

தூத்துக்குடி பிரையண்ட் நகரில் ஏற்பட்டுள்ள கனமழை சேதங்களை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்

வெள்ளநீரை அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (2.12.2021) தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரையண்ட் நகரில் கனமழையால் ஏற்பட்டுள்ள சேதங்களையும், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார், மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். வெள்ளநீரை அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!