முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் சிங்கப்பூர் நாட்டு மந்திரி சந்திப்பு

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் சிங்கப்பூர் நாட்டு மந்திரி சந்திப்பு
X
சென்னையில் முதல் அமைச்சர் முக ஸ்டாலினை இன்று சிங்கப்பூர் மந்திரி ஈஸ்வரன் சந்தித்து பேசினார்.
சென்னையில் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் சிங்கப்பூர் நாட்டு மந்திரி ஈஸ்வரன் இன்று சந்தித்து பேசினார்.

தமிழக முதல் அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தொழில் வளத்தை பெருக்குவதற்காக அவ்வப்போது வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டு போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்பு துறை மந்திரி எஸ்.ஈஸ்வரன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அங்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் இருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் சிங்கப்பூரின் போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்பு மந்திரி ஈஸ்வரனை சந்தித்தது ஒரு அற்புதமான தருணம். தமிழ்நாட்டிற்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான பண்பாடு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தினோம் என குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!