மாணவர்களுக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி முதல்வர் துவக்கிவைப்பு..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்பு படம்).
CM News Today - தமிழக முதல்வர் ஸ்டாலின் மாணவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்ட நான் முதல்வன் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரி கனவு" என்னும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் நோக்கம் மேல்நிலைப்பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களின் எதிர்கால கனவை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுவது ஆகும். மேலும் பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் குறித்தும் கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது எனவும் விளக்கம் தரப்படுகிறது. மேலும் வேலைவாய்ப்புகள் தொடர்பாக வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu