புதுப்பொலிவு பெறும் சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம்

புதுப்பொலிவு பெறும் சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம்
X

சேப்பாக்கம் மைதானத்தை  புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னதாக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் புதிய பெவிலியன் ஓரளவு தயாராக இருக்கும்

உலகின் பழம்பெருமை வாய்ந்த விளையாட்டு மைதானங்களில் சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் ஒன்று. சேப்பாக்கத்தில் 1934ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றி உள்பட பல்வேறு சாதனைகள் இந்த மைதானத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளன.

கடந்த 2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இந்த மைதானத்தின் பெரும்பாலான பகுதி இடித்து புதுப்பிக்கப்பட்டது. அப்போது ஐ, ஜே, கே ஆகிய கேலரிகள் விதிமுறையை மீறி கட்டப்பட்டு இருப்பதாக கூறி சீல் வைக்கப்பட்டு அவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த பிரச்சினைக்கு கடந்த ஆண்டு தீர்வு காணப்பட்டது.

இந்த நிலையில் சேப்பாக்கம் ஸ்டேடியம் மேலும் புதுப்பொலிவு பெறுகிறது. அதாவது பெவிலியன் மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் அமைந்து இருந்த பழைய கட்டிடங்களை இடித்து அதனை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த இடத்தில் சுமார் ரூ.80 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய வீரர்கள் தங்கும் அறை, கேலரிகள் உள்ளிட்டவை கட்டப்பட இருக்கின்றன.

இடிக்கும் பணியை முடிக்க இன்னும் 15 நாட்கள் ஆகும். அது முடிந்ததும், கட்டுமானப்பணி துவங்கும். புதுப்பிக்கப்பட்ட பெவிலியன் தரை மற்றும் முதல் தளம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, முழு வேலைகளையும் முடிக்க இன்னும் நான்கு மாதங்கள் ஆகும்

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil