சென்னை எழும்பூரில் 28ம் தேதி மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்

பைல் படம்
சென்னை எழும்பூரில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் 28ம் தேதி நடைபெறுகிறது.
சென்னை எழும்பூரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை வடக்கோட்ட அலுவலகம், சென்னை 600 008 என்ற முகவரியில் 28.12.2023 அன்று மாலை 3.00 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
பொதுமக்கள் தங்களது புகார்களை கையொப்பமிட்ட கடிதத்தில் கீழ்க்கண்ட விவரங்களோடு-பதிவு தபால் (பதிவு செய்யப்பட்ட தேதி), பார்சல், காப்பீடு, மணியார்டர், அனுப்புநர் மற்றும் பெறுநர் முகவரிகள் போன்ற தகவல்களுடனும், சேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் அல்லது ஊரக அஞ்சலக காப்பீட்டுத் திட்டங்கள் தொடர்பான புகார்களில், கணக்கு எண், பாலிசி எண் ஆகியவற்றுடன் புகார்தாரரின் முழு முகவரி, அஞ்சல் நிலையப் பெயர் போன்ற தகவல்களுடனும் அனுப்ப வேண்டும். புகார்களை 26.12.2023 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ அனுப்பவும்.
புகார்களை சாதாரண தபாலிலோ அல்லது பதிவுத் தபாலிலோ அல்லது dochennainorth@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். புகார்கள் அடங்கிய உறையின் மேற்பகுதியில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு- சென்னை வடக்கோட்டப் பிரிவு என குறிப்பிடப்பட வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu