தமிழகத்துக்கு 1,112 கோடி, மேகாலயவுக்கு 296 கோடி -கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்

தமிழகத்துக்கு 1,112 கோடி, மேகாலயவுக்கு 296 கோடி -கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்
X

சென்னை நகரை பருவநிலை மாற்றங்களுக்கு உகந்த அதிக பசுமை நிறைந்ததாகவும், வாழ்வதற்குத் தகுதியுள்ள வகையிலும் உலகத் தரத்திலான நகரமாக உருவாக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு உதவும் வகையிலும் இந்தக் கடனை வழங்க ஒப்புதல் அளித்திருப்பதாக உலக வங்கி அதன் செயல் இயக்குநர்கள் குழுவிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுதவிர, மேகாலய மாநிலத்தில் சுகாதார சேவைகளைத் தரம் உயர்த் தவும், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட அவசரகால மருத்துவத் தேவைகளைக் கையாளும் வகையில் மாநிலத்தின் திறனை மேம்படுத்தும் வகையிலான திட்டத்துக்காக அந்த மாநிலத்துக்கு ரூ. 296 கோடி கடன் வழங்கவும் உலக வங்கி ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதுதொடர்பாக உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது: சுமார் ஒரு கோடி மக்கள்தொகையுடன் இந்தியாவில் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநகரமாக சென்னை உள்ளது. மாநிலத்தின் பொருளாதார மையமாக விளங்கும் சென்னை, இயற்கைப் பேரிடர், பருவநிலை மாற்ற பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய நகரமாகவும் உள்ளது.

இத்தகைய சூழலில் 'சென்னை நகர கூட்டுறவு: நிலைத்த நகர்ப் புற சேவைகள் திட்டம்' என்ற திட்டத்தின் கீழ் ரூ. 1,112 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்திருப்பது, நகரின் சேவைத் துறைகளின் நிதி நிலையை மேம்படுத்த உதவும் என்பதோடு, குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றுதல், போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய 4 முக்கிய நகர்ப்புற சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.

மேகாலயத்துக்கு வழங்கப்பட இருக்கும் கடன் மூலம், அந்த மாநிலத் தில் உள்ள 11 மாவட்டங்களும் பயன்பெறும். அதோடு, மாநிலத்தின் ஆரம்ப சுகாதார மையம் மற்றும் இரண்டாம் நிலை சுகாதார மைய ஊழியர்கள், அவர்களுடைய மேலாண்மைத் திறன் மற்றும் சிகிச்சைய ளிக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ளவும் உதவும். குறிப் பாக, மாநில மருத்துவ சுகாதார சேவைகளை பெண்கள் சிறந்த முறை - யில் பயன்படுத்திக் கொள்ள இந்தத் திட்டம் உதவும்.

மேகாலயத்தில் 5 வயதுக்குள்பட்ட இறப்பு விகிதம் 2019-20-ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 40 உயிரிழப்புகள் என்ற விகிதத்தில் இருந்தது. இது முந்தைய 2015-16-ஆம் ஆண்டு கணக்கெடுப்பைக் காட்டிலும் சற்று கூடுதலாகும். இந்த விவகாரத்தில் மாநிலத்தின் ஒருசில மாவட்டங் கள் சிறப்பாக செயல்பட்டபோதும், கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்க ளுக்கும் இடையேயான வேறுபாடு தொடர்கிறது. பெரும்பாலான சுகா தாரக் குறியீடுகளில் நகர்ப்புறங்கள் சிறப்பாக செயல்படுகின்றன.

அதே நேரம், தொற்றும் தன்மை அல்லாத உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் மேகலாயத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றன என்று உலக வங்கி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!