சோசியல் மீடியாவில் படு ஆக்டீவாக இருக்கும் குஷ்புவுக்கு என்ன ஆச்சு?

சோசியல் மீடியாவில் படு ஆக்டீவாக இருக்கும் குஷ்புவுக்கு என்ன ஆச்சு?
X
அப்போலோ மருத்துவமனையில் குஷ்பூ எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை

எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டீவாக இருப்போரில் முக்கியமானவர் குஷ்பு .அண்மையில் அரசியல் காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றார். அதை முடிச்சுப்புட்டு வீடு திரும்புவார் என்று பார்த்தால் தற்போது அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். திடீரென அவருக்கு என்ன ஆச்சு? என்பது தெரியலை, ஆனால் கையில் சுற்றிய ஊசியுடன் புகைப்படம் எடுத்து அதை தன் பேஜில் ஷேர் செஞ்சு செய்து குணமடைந்து வருகிறேன் அப்படீன்னு கமெண்ட் செஞ்சிருக்கார்.


நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ சென்னை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பிரபல நடிகையும் பாஜகவின் முக்கிய நிர்வாகியான குஷ்பூ, தான் அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் அவரது கையில் ஊசி இருப்பது போன்ற புகைப்படமும் வெள்ளிக்கிழமை என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் குஷ்பு விரைவில் குணமாக வேண்டுமென்று மருத்துவமனையின் சார்பில் அளிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளையும் குஷ்பு பகிர்ந்துள்ளார். மேலும் குஷ்பூ தன்னை அப்போலோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை மருத்துவர்கள் நன்றாக கவனித்துக் கொண்டார்கள் என்றும் அவர்களுக்கு தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.


இதனை அடுத்து குஷ்புவுக்கு என்ன ஆச்சு? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் குஷ்பூ எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




Next Story