கோயம்பேடு மார்க்கெட் ஞாயிற்றுகிழமை செயல்படும்: அங்காடி நிர்வாக குழு!

கோயம்பேடு மார்க்கெட் ஞாயிற்றுகிழமை செயல்படும்: அங்காடி நிர்வாக குழு!
X

சென்னை கோயம்பேடு மார்க்கெட்

சென்னை கோயம்பேடு மார்க்கெட் வருகிற ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என்று அங்காடி நிர்வாக குழு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூ, பழம், காய்கறி கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டடது.

இந்தநிலையில் வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து சந்தைக்கு வார விடுமுறை நாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 30ம் தேதி அன்று மார்க்கெட் வழக்கம்போல் செயல்படும் என்று அங்காடி நிர்வாக குழு அறிவித்துள்ளது.

Tags

Next Story
ai marketing future