கிராமத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு இளைஞர்கள் பயம் இல்லாமல் சுற்றுவதா? சீமான் கண்டிப்பு
கடல் தீபன், தேவா ஆகிய இருவருக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் சீமான் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
சென்னை மேற்கு கே.கே.நகரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கடல் தீபன், தேவா ஆகிய இருவருக்கும் கட்சியின் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது:
கட்சியின் உண்மை நிர்வாகிகள் மறையும் நிகழ்வுகள் மிகுந்த மன துயரத்தையும் சோர்வையும் தந்துவிடுகிறது. கடல் தீபனுக்கு கொரோனா தொற்று ஏற்பத்திய பாதிப்பினால் இறந்ததாகவும், கொரோனா காலத்தில் அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பொது இடங்களில் சென்றால் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிகின்றனர். கிராமங்களில் யாருமே முக கவசம் அணிவதில்லை. கொரோனா குறித்த அச்சமும் விழிப்புணர்வும் மக்களிடம் இல்லாமல் போய்விட்டது வருத்தமாக உள்ளது.
இதனால், கவனக்குறைவுடன் இருக்க கூடாது, பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தொண்டர்களாகிய உங்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன். தலைக் கவசம் அணியாமல் விபத்துக்குள்ளாகி பலரை இழந்துவிட்டோம். இளைஞர்கள் தலைக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். தமிழ் தேசியம் பேசுவதால் என்னை வேற்று கிரகவாசியாகவும், சீமானுக்கு பல் எல்லாம் பாஸ்பரஸ், விரரெல்லாம் துப்பாக்கி என நினைத்து பேசுகின்றனர் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu