அயனாவரத்தில் மூட்டுவலியால் அவதிப்பட்ட ஐ.டி. பொறியாளர் தற்கொலை

அயனாவரத்தில் மூட்டுவலியால் அவதிப்பட்ட  ஐ.டி. பொறியாளர் தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட வெங்கடேசன்.

சென்னை அயனாவரத்தில் மூட்டுவலியால் அவதிப்பட்ட ஐ.டி. பொறியாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அயனாவரம் கே.எச். சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வெங்கடேசன்(57). இவருக்கு சுனிதா(54) என்ற மனைவியும், சித்தார்த்(16), வர்ஷா(15) என இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். வெங்கடேசன் கீழ்ப்பாக்கத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த சில மாதங்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த வெங்கடேசனுக்கு மூட்டு வலி அதிகமானதன் காரணமாக நேற்று அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பினார்.இரவு முழுதும் வெங்கடேசன் மூட்டு வலியால் அவதிப்பட்டு துடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வெங்கடேசன் அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கீழே விழுந்ததில் படுகாயமடைந்தவரை பார்த்த அக்கம் பக்கத்தினரும், குடும்பத்தாரும் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலைச் சம்பவம் தொடர்பாக வெங்கடேசனின் மனைவி சுனிதா அளித்த புகாரின் அடிப்படையில் அயனாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!