/* */

இந்தியாவின் தன்னிறைவு - உள்நாட்டு உற்பத்தியில் ஐசிஎப் பெரும்பங்காற்றுகிறது

400 வந்தே பாரத் விரைவு ரயில் பெட்டிகளை தயாரித்து அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்

HIGHLIGHTS

இந்தியாவின் தன்னிறைவு - உள்நாட்டு உற்பத்தியில் ஐசிஎப் பெரும்பங்காற்றுகிறது
X

சென்னை பெரம்பூர் ஐசிஎப் ரயில் பெட்டி தொழில்சாலையில்  தயாராகி வரும் வந்தே பாரத் ரயில் பெட்டி

இந்தியாவின் தன்னிறைவு மற்றும் உள்நாட்டுத் தயாரிப்பில் ஐசிஎப் பெரும் பங்காற்றுகிறதென ரயில்வே இணை அமைச்சர் பாராட்டினார்.

மத்திய இரயில்வே இணை அமைச்சர் தர்சனா ஜர்தோஷ் இன்று ஐசிஎப்க்கு வருகை தந்து இலங்கை ரயில்வேக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள சொகுசு விரைவு ரயில்பெட்டிகளின் 15வது தொகுப்பை கொடியசைத்து அனுப்பி வைத்தார். ஐசிஎப்பில் அவரை ஐசிஎப் பொது மேலாளர் அதுல் குமார் அகர்வால், மற்றும் ஐசிஎப் அதிகாரிகளும் ஊழியர்களும் வரவேற்றனர். அவர் ஐசிஎப் -ல் தயாரிக்கப்பட்டு வரும் அதிகரிக்கப்பட்ட படுக்கை வசதி கொண்ட மூன்றாம் வகுப்பு ரயில்பெட்டியையும் மற்றும் ஐசிஎப்- ல் பல்வேறு தயாரிப்பு நிலைகளில் உள்ள வந்தே பாரத் ரயில்பெட்டிகளையும் பார்வையிட்டார். ஐசிஎப் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும வந்தே பாரத் ரயில்பெட்டி தயாரிப்பில் சம்பந்தப்பட்ட அனைவருடனும் கலந்து உரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் பேசியதாவது: பாரதப் பிரதமரின் வழிகாட்டுதலின்படி, இந்தியாவை தன்னிறைவு கொண்ட நாடாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டாக கொண்டாடப்பட்டு வரும் இந்த வேளையில், 400 வந்தே பாரத் விரைவு ரயில் தொடர்களை தயாரித்தளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது இரு வந்தே பாரத் விரைவு ரயில்கள் புதுதில்லியில் இருந்து வாராணசி மற்றும் காத்ராவிற்கு சென்று வருகின்றன. உள்நாட்டு தயாரிப்பு முயற்சிகளில் பெரும் பங்காற்றி வரும் ஐசிஎப்பில் அனைத்து தயாரிப்பு பணிகளையும் பார்த்து நான் மகிழ்ச்சியடைந்தேன். இந்தியாவை தற்சார்பு நாடாக்குவது மட்டுமல்லாமல், நமது தொழில்நுட்பத் திறனை மேலை நாடுகளும் கண்டு வியக்கும் வண்ணம், தற்போது ஐசிஎப் ரயில்பெட்டிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ரயில்பெட்டிகள் இலங்கை ரயில்வேக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்..

Updated On: 2 March 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு