நாய்கள் கடித்த ஆட்டுக்குட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க வரமறுத்த அரசு கால்நடை மருந்தகம்

நாய்கள் கடித்த ஆட்டுக்குட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க வரமறுத்த அரசு கால்நடை மருந்தகம்
X

நாய்கள் கடித்ததால் பலியான ஆடுகள்

விளாத்திக்குளம் அருகே நாய்கள் கடித்த ஆட்டுக்குட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு கால்நடை மருத்துவர் வரமறுத்ததால் நான்கு ஆடுகள் பலி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் குளக்காட்டான்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ். அவரது மனைவி காளியம்மாள். இவர்கள் ஆடுமேய்க்கும் தொழில் செய்து வருகிறார். சுமார் 200க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து நிலங்களில் வலை அமைத்து கிடை போட்டு ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகிறார்.

இன்றும் வழக்கம் போல தனது கடைகளில் ஆட்டு குட்டிகளை விட்டு, ஆடுகளை மட்டும் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையில் அப்பகுதியில் சுற்றி திரிந்த 2 நாய்கள் கிடைக்குள் புகுந்து அங்கிருந்த ஆட்டுகுட்டிகளை கடித்து குதறியுள்ளது. இதில் 19 ஆட்டுக்குட்டிகள் காயம் அடைந்தன. இதில் சில ஆடுகள் உயிருக்கு போராடி கொண்டு இருந்தன. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அந்த நாய்களை விரட்டியுள்ளனர். மேலும் காளியம்மாளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காளியம்மாள் புதூர் அரசு கால்நடை மருந்தகம் மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஆனால் வெகுநேரமாகியும் கால்நடை மருந்தகத்தில் இருந்து யாரும் வரவில்லை என்பதால் வேறு வழியில்லாமல் தனியார் மருந்தகத்துக்கு சென்று தனது ஆட்டுக்குட்டிகளை நாய்கள் கடித்தது குறித்து தெரிவித்து, மருந்துக்கள் கேட்டுள்ளார். இதைடுத்து மருந்துக்களின் விலை 1400 ரூபாய் என்று மெடிக்கல் உரிமையாளர் கூற, காளியம்மாள் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும், மருந்துகொடுத்தால் நாளை கடன் வாங்கி பணம் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு மெடிக்கல் உரிமையாளர் யோசிக்க, காளியம்மாள் தனது ரேஷன் கார்டினை அடமானம் வைத்து விட்டு, மருந்துகள் தாங்கள், பணத்தினை கொடுத்து ரேஷன் கார்டினை மீட்டுக்கொள்வதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மெடிக்கல் உரிமையாளர் ரேஷன் கார்டு வேண்டாம், மருந்துக்களை கொண்டு செல்லுங்கள், பணம் வந்ததும் கொடுங்கள் என்றுள்ளார்.

இதனை தொடர்ந்து காளியம்மாள் மருந்து வாங்கி சென்று தாங்கள் கிடை போட்ட நிலைத்திற்கு சென்ற போது, 4 ஆட்டுக்குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இருந்தாலும் மற்ற ஆட்டுக்குட்டிகளை காப்பற்ற வேண்டும் என்பதற்காக அவரும், அவரது கணவரும் ஆட்டுக்குட்டிகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும் அதில் பல ஆட்டுக்குட்டிகளின் நிலைமை மோசமாக உள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் 2 லட்ச ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கால்நடை மருத்துவர் சரியான நேரத்திற்கு வந்து இருந்தால் ஆட்டுக்குட்டிகளை காப்பாற்றி இருக்கலாம் என்றும் தம்பதியினர் கவலையுடன் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் கால்நடை மருத்துவமனையை தொடர்பு கொண்டு சிகிச்சை அளிக்க வருமாறு கேட்ட போது, அவர்கள் தங்களால் வரமுடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.

விளாத்திகுளம், புதூர் பகுதியில் விவசாயித்திற்கு அடுத்தப்படியாக கால்நடை வளர்ப்பு தான் மிகவும் முக்கியமான தொழில். இருப்பினும் அரசு கால்நடை மருத்துவனையில் இருந்து சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அதுஉண்மை என்பது போல ஆட்டுக்குட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க வரமால் இருந்தது நிரூபித்துள்ளது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!