சென்னையில் நூதன முறையில் மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு

சென்னையில் நூதன முறையில் மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு
X

பைல் படம்.

சென்னையில் நூதன முறையில் மூதாட்டிகளிடம் செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை அயனாவரம், என்.எம்.கே., தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி(80). அதே பகுதியில் உள்ள சோமசுந்தரம் தெருவை சேர்ந்தவர் மைதிலி(70). இவர்கள் இருவரும் அயனாவரத்தில் உள்ள தபால் நிலையத்தில் மாதாந்திர முதியோர் உதவித்தொகை வாங்கி வருகின்றனர். அதேபோல் நேற்று முன்தினம் இருவரும், தலா ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வாங்கி கொண்டு, அயனாவரம் என்.எம்.கே., தெரு மற்றும் மேட்டு தெரு சந்திப்பில் நடந்து சென்றனர்.

அப்போது, அந்த வழியாக சைக்கிளில் வந்த(55) மதிக்கதக்க மர்ம நபர், இவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அந்த நபர், இரு மூதாட்டிகளிடமும், உங்களை போன்ற முதியவர்களுக்கு, அருகில் உள்ள இடத்தில், 5 ஆயிரம் ரூபாய் தருகின்றனர். நீங்கள் நகைகள் அணிந்திருந்தால் பணம் கொடுக்க மாட்டார்கள் என்று கூறி இருவரும் அணிந்திருந்த, செயின் உள்ளிட்ட 3.5 சவரன் நகைகளை வாங்கி தப்பியுள்ளார்.

வெகு நேரம் காத்திருந்த மூதாட்டிகள் மீண்டும் மர்ம நபர் வராத காரணத்தினால் சந்தேகமடைந்த மூதாட்டிகள் இருவரும் அவர்களது வீட்டிற்கு சென்று குடும்பத்தினரிடம் இதுகுறித்து கூறியுள்ளனர். சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அயனாவரம் காவல் நிலையதில் நேற்று புகார் அளித்தனர். போலீசார் அங்குள்ள கேமராக்களை ஆய்வு செய்து, மர்மநபரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்