அயனாவரத்தில் முன்விரோதம் காரணமாக ரவுடியை வெட்டிய வழக்கில் 3 பேர் கைது

சென்னை அயனாவரம், வீராசாமி 3வது தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 22; பெயின்டர். அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் குமார், சிவகுமார் உள்ளிட்டோர் இவரது நண்பர்கள். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி கிருபானந்தன், 20, மற்றும் மணிகண்டன் கார்த்திக் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது
கடந்த 2019ல், அயனாவரம், சபாபதி தெருவில் இரு தரப்பும் மோதி கொண்டனர். அப்போது, கிருபாகரனை, சதீஷ்குமார் உள்ளிட்டோர் தலையில் வெட்டியுள்ளனர். இது குறித்து விசாரித்த அயனாவரம் போலீசார், இருதரப்பினரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன்காரணமாக இருதரப்பினருக்கும் பல மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது
இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில், பெயின்டர் சதீஷ்குமாரை,கடந்த 7ம் தேதி இரவு, அயனாவரம், ராஜி தெருவில் ரவுடி கிருபானந்தன் உள்ளிட்டோர் சரமாரியாக வெட்டி தப்பினார். பலத்த காயமடைந்த சதீஷ்குமார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய, அயனாவரத்தை சேர்ந்த ரவுடி கிருபாநந்தன், 21, அண்ணா நகர் அன்னை சத்யா நகரை சேர்ந்த சூர்யா 19, பாடியை சேர்ந்த வாண்டு சிவா, 19 ஆகியோரை நேற்று அயனாவரம் போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்..
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu