மூதாட்டியிடம் 5 சவரன் நகை பறிப்பு: ஹெல்மெட் திருடர்களுக்கு போலீசார் வலை
மாதிரி படம்.
அயனாவரத்தில் மூதாட்டியிடம் இருந்து 5 சவரன் தங்கச் செயின் பறிப்பு ஹெல்மெட் அணிந்து வந்த திருடர்களுக்கு போலீசார் வலை
சென்னை அயனாவரம் சோமசுந்தரம் 6வது தெரு பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி வயது 69. இவரது கணவர் இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கஸ்தூரி இன்று காலை கொளத்தூரில் உள்ள உறவினர் வீட்டு கிரகப் பிரவேசத்திற்கு செல்வதற்காக கிளம்பி தனது வீட்டில் இருந்து குன்னூர் நெடுஞ்சாலையில் ஆட்டோவிற்காக காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் கஸ்தூரி அணிந்திருந்த 5 சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்தனர். உடனடியாக கூச்சலிட்ட கஸ்தூரியை அக்கம்பக்கத்தினர் சமாதானப்படுத்தி அயனாவரம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கஸ்தூரி அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அயனாவரம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu