விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

விஜயகாந்த்  மருத்துவமனையில் அனுமதி
X
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக அதிகாலை 3 மணி அளவில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்பொழுது கேப்டன் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!