சாலையில் பழுதாகி நின்ற வாகனம் மீது பைக் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

சாலையில் பழுதாகி நின்ற வாகனம் மீது பைக் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு
X

வேளச்சேரி அருகே சாலையில் பழுதாகி நின்ற வாகனத்தால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஐடி நிறுவன இளைஞர் உயிரிழப்பு.

வேளச்சேரி பிரதான சாலையில் பழுதாகி நின்ற வாகனத்தால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஐடி நிறுவன இளைஞர் உயிரிழப்பு.

சென்னை வேளச்சேரி பிரதான் சாலை பீனிக்ஸ் மால் எதிரில் பொலிரோ கார் ஒன்று பழுதாகி நின்றது குறுகிய சாலையான அங்கேயே நின்று பழுதை சரிசெய்து கொண்டிருந்தனர். காரின் பின்புறம் ஜெனரேட்டர் ஒன்றையும் கட்டி இழுத்து வந்திருந்தது.

இந்நிலையில் கீரிம்ஸ் சாலையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் கிருஷ்ணகிரியை சேர்ந்த உதயகுமார்(23), என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வேளச்சேரி பிரதான சாலை பீனிக்ஸ் எதிரில் வந்த போது ஜெனரேட்டரோடு சாலையை ஆக்கிரமித்து நின்று கொண்டிருந்த காரின் பின்சக்கரத்தில் மோதியதாக கூறப்படுகிறது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவர் மீது கலவை கலக்கும் லாரி தலையில் ஏறி இறங்கி மூளை சிதறி நிகழ்விடத்திலேயே பலியானார். லாரி ஓட்டுநர் லாரியை சாலையிலேயே விட்டு விட்டு தப்பியோடிவிட்டார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு பொது மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்திற்கு காரணம் பழுதாகி சாலைய்லேயே நின்ற கார் காரணமா அல்லது லாரி காரணமா என்பது குறித்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய லாரி ஓட்டுநரையும் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!