வேளச்சேரியில் சேதமடைந்த நிலையில் பேருந்து நிழற்குடை சரி செய்யப்படுமா

வேளச்சேரியில் சேதமடைந்த நிலையில் பேருந்து நிழற்குடை சரி செய்யவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை வேளச்சேரி, 100 அடி சாலை, ஏரிக்கரையை ஒட்டி பயணிகளுக்கான பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிழற்குடையானது சில மாதஙகளுக்கு முன்பு வாகனம் ஒன்று மோதி சேதமடைந்தது.
அதன் பிறகு பேருந்து நிழற்குடையை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகமும், போக்குவரத்து நிர்வாகமும் முன் வரவில்லை, இரு துறைகளும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர்.
நிழற்குடையில் ஒரு பகுதி முழுவதுமாக சேதமடைந்து எப்போது வேண்டுமானலும் சரிந்து விழும் அபாயம் உள்ளது. பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளுக்கு விபத்து எப்போது ஏற்படும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக பேருந்து நிழற்குடையை சரிசெய்து பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu