வேளச்சேரியில் சூர்யா அறக்கட்டளை சார்பில் ஏழை எளியோருக்கு நலதிட்ட உதவிகள்

வேளச்சேரியில் சூர்யா அறக்கட்டளை சார்பில் நல திட்ட உதவிகளை அதிமுக அமைப்பு செயலாளர் மைத்ரேயன் வழங்கினார்.
சென்னை வேளச்சேரி, திரெளபதி அம்மன் கோவில் தெருவில், சூர்யா அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனரும், அதிமுக அம்மா பேரவை மாநில துணை செயலாளரும், முன்னாள் வேளச்சேரி பகுதி கழக செயலாளருமான வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி தலைமையில், அதிமுக அமைப்பு செயலாளர் வா.மைத்ரேயன் முன்னிலையில் சுமார் 300 ஏழை எளியோருக்கு இலவச தண்ணீர் குடம், தினமும் 25 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஹாட்பாக்ஸ் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து அதிமுக பிரமுகர் வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி என்பவர் சூர்யா அறக்கட்டளை மூலம் சனிக்கிழமை தோறும், ஏழை, எளியோருக்கு இலவச அறுசுவை உணவு, கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு கல்விக் கட்டணம், இலவச கணினி பயிற்சி, இறுதி சடங்கிற்கு இலவச சவப்பெட்டி என கடந்த 5 ஆண்டுகளாக செய்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu