பறிமுதல் செய்த காரை சட்டவி ரோதமாக பயன்படுத்தும் வேளச்சேரி போலீஸ்

வேளச்சேரி குற்றப்பரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரால் பறிமுதல் செய்யப்பட்ட கார் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுகிறது.
சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த கணேஷ் சங்கர்(27) என்பவர் BERAKHAH BUSINESS SOLUTIONS என்ற கால் சென்டர் நிறுவனம் லோன் வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று தன்னை மோசடி செய்ததாக புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி போலீசார் போலி கால்சென்டர் நிறுவனத்தை நடத்தி வந்த திமுக பிரமுகர் பிரேம்குமாரின் மனைவி பென்னிஷா உட்பட இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7- தொலைபேசி, 3 செல்போன், ஒரு ஸ்கார்பியோ கார், 40000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட காரை கடந்த ஒரு வருட காலமாக வேளச்சேரி போலீசார் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
எங்கு இதில் நாம் சிக்கி விடுவோமோ என எண்ணி காரில் உள்ள நெம்பர் பிளேட்டை கழட்டி பத்திரமாக வைத்து விட்டு, காரை நெம்பர் பிளேட் இல்லாமல் வேளச்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணன் பயன்படுத்தி வருகிறார். அவருக்கு ஓட்டுநராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார்.
அதே போல் வேளச்சேரியில் போலீசார் எங்காவது செல்ல வேண்டுமென்றால் இந்த காரை பந்தாவாக எடுத்துக் கொண்டு பறக்கின்றனர். இதனை அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேளச்சேரி காவல் நிலைய சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தெரிந்து கொள்ளலாம்.
குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணன் தனக்கென ஒதுக்கிய காவல்துறை வாகனத்தை பயன்படுத்தாமல் சட்டவிரோதமாக பறிமுதல் செய்யப்பட்ட காரை பயன்படுத்தி வருவது எப்படி.
அதே போல் சமீபத்தில் வேளச்சேரியில் மசாஜ் சென்டர் விவகாரத்தில் கூட ஆய்வாளர் 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் வழக்கே பதிவு செய்தாராம், தற்போது அதில் குற்றவாளிகளாக உள்ள சிலரை கைது செய்யாமல் இருக்கவும் பேரம் பேசப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட காரை பயன்படுத்தி வரும் வேளச்சேரி போலீசார் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu