வாகன லிப்ட் இயங்கவில்லை.. வலுக்கட்டாயமாக இழுத்ததில் மாட்டின் பால் மடி அறுந்தது

வாகன லிப்ட் இயங்கவில்லை.. வலுக்கட்டாயமாக இழுத்ததில் மாட்டின் பால் மடி அறுந்தது
X
சினை மாட்டின் பால் மடி அறுந்து இரத்தம் வழிந்த சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் கேசரி நகர், தாமிரபரணி தெருவில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிப்பதற்கு மாநகராட்சி சுகாதார அலுவலர் பிரியா தலைமையில் சென்றிருந்தனர். சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.

அப்போது வாகன லிப்ட் இயங்காததால் வலுகட்டாயமாக மாட்டை இழுத்ததால் வாகனத்தின் தகரத்தில் பட்டு சினை மாட்டின் மடி அறுந்து தொங்கி மாட்டிற்கு இரத்தம் வழிந்து துடி துடித்து போனது.

பின்னர் தகவலறிந்து மாட்டின் உரிமையாளர் ஜெகதீஸ்வரன் என்பவர் சமபவ இடத்திற்கு வந்து அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டார். இதனையடுத்து அதிகாரிகள் மாட்டிற்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆதார மீட்பு மையத்திற்கு கொண்டு வந்து முதலுதவி அளித்தனர். இத்தகவல் அறிந்து ஆதமாபாக்கம் சுற்று வட்டார பகுதியில் மாடுகளை வளர்க்கும் 50 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர்.

மண்டல சுகாதார அலுவலர் சுதாவிடம் மாடு வளர்ப்போர் சங்கத்தினர் உடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் ஆதம்பாக்கத்தில் 2000 மாடுகள் வளர்க்கப்படுகின்றன. ஏரிக்கரை அருகில் தொழுவம் அமைத்து கொடுக்க வேண்டும், பிரதான சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை மட்டும் பிடிக்கவும், உட்புற தெருக்களில் வீடுகளில் வழங்கும் உணவுகளை உண்ணும் மாடுகளை பிடிக்க வேண்டாம், மேலும் பாதிக்கப்பட்ட மாட்டின் உரிமையாளரின் வாழாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் வேப்பேரியில் மாட்டிற்கு தேவையான சிகிச்சை அளிக்க மாநகராட்சி முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். பரிசீலனை செய்வதாக அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!