புதுப்பிக்கும் பணிக்காக சென்ற வீட்டில் நகையை திருடிச்சென்ற 2 பேர் கைது

புதுப்பிக்கும் பணிக்காக சென்ற  வீட்டில் நகையை திருடிச்சென்ற 2 பேர் கைது
X
டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்ட நீலாங்கரையை சேர்ந்த பிரபு(22), மற்றும் அருண்(33), ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்

புதுபிக்கும் பணியிக்குச் சென்ற வீட்டில் இருந்த 20 சவரன் தங்க நகை, டிவி ஆகியவற்றை திருடிச்சென்ற இரு நபர்களை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை திருவான்மியூர், எல்.பி.சாலையில் வசித்து வருபவர் கணேசன்(50), இவரது வீட்டை புதுபிக்க முடிவெடுத்து கடந்த மாதம் 5 பேரை வைத்து வீட்டை புதுபிக்கும் பணியில் ஈடுபடுத்தினார்.இந்நிலையில் கடந்த 8ம் தேதி வீட்டில் பார்த்த போது 20 சவரன் தங்க நகை, 65 இன்ச் டிவி ஆகியவை காணாமல் போயிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீலாங்கரை உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் ஆய்வாளர் தர்மா, உதவி ஆய்வாளர் கோபால், முதல் நிலை காவலர் ஜெயசந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் வீட்டில் வேலை பார்த்த 5 பேரிடமும் தனிப்படை போலீசார் தனித்தனியே விசாரணை மேற்கொண்டதில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்ட நீலாங்கரையை சேர்ந்த பிரபு(22), மற்றும் அருண்(33), ஆகிய இருவர் தான் நகை, டிவியை திருடியதாக ஒப்புக் கொண்டனர்.இருவரும் திருடிய நகைகளை வங்கியில் அடமானம் வைத்து பணத்தை செலவழித்துள் ளனர்.அவர்களிடமிருந்து டிவியை பறிமுதல் செய்து வங்கியில் உள்ள நகைகளை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர் படுத்தினர்.

Tags

Next Story
ai solutions for small business