வேளச்சேரி தனியார் பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து: 2 பேர் காயம்

வேளச்சேரி தனியார் பள்ளியில் மேற்கூரை  பெயர்ந்து விழுந்து விபத்து: 2 பேர் காயம்
X

பைல் படம்

பள்ளியின் பால்சீலிங் பெயர்ந்து விழுந்ததில் காயமுற்ற 1ம் வகுப்பு குழந்தைகள் இருவர் மருத்துவமனையில் அனுமதி

வேளச்சேரியில் டிஏவி பள்ளியில் பால்சீலிங் பெயர்ந்து விழுந்து விபத்து 1ம் வகுப்பு குழந்தைகள் இருவருக்கு தலையில் படுகாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை வேளச்சேரியில் உள்ள டிஏவி பப்ளிக் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வரும் மடிப்பாக்கத்தை சேர்ந்த தர்ஷன்(6), மற்றும் சகானா(6), இருவரும் இன்று மதியம் 1 மணியளவில் உணவு இடைவேளையில் சாப்பிட்டு கொண்டிருந்த போது பள்ளியின் மேலே இருந்து பால்சீலீங் பெயர்ந்து குழந்தைகளின் தலையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக பள்ளி நிர்வாகம் பள்ளிகரணையில் உள்ள காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.தர்ஷனுக்கு தலையில் மூன்று தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உடல் நிலை சீராக உள்ளது, ஆனால் சகானாவிற்கு பலத்த காயம் என்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனியார் பள்ளிகள் பள்ளியின் தரத்தை உறுதி செய்யாமல் விட்டதே இது போன்ற விபத்திற்கு காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சம்பவம் தொடர்பாக வேளச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!