பெசன்ட் நகரில் சுனாமி 17ம் ஆண்டு நினைவஞ்சலி

பெசன்ட் நகரில் சுனாமி 17ம் ஆண்டு நினைவஞ்சலி
X

சுனாமியில் உயிரிழந்த உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தியினை ஏற்றி மரியாதை செலுத்தினர்

17ம் ஆண்டு சுனாமி நினைவு நாளையொட்டி கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்திய பெசன்ட் நகர் கடற்கரை ஒடைமா நகர் பகுதி மக்கள்.

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழி பேரலையில் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். அச்சம்பவம் நடந்து இன்று 17 ஆண்டுகள் ஆகிறது. அதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
சென்னை பெசன்ட் நகர் ஓடைமாநகர் கடற்கரை பகுதி மக்கள் சுனாமி கடல் சீற்றத்தால் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தியினை ஏற்றி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து கடலில் பால் ஊற்றியும் மலர் தூவியும் தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.

Tags

Next Story
ai marketing future