கஞ்சா விற்பனை செய்த ஆன்லைன் உணவக ஊழியர் உள்பட 3 பேர் கைது

கஞ்சா விற்பனை செய்த ஆன்லைன்  உணவக ஊழியர் உள்பட 3 பேர் கைது
X
online restaurant employee, have been arrested for selling cannabis

கஞ்சா விற்பனை செய்த ஆன்லைன் உணவு நிறுவன ஊழியர்கள் மூவர் கைது செய்து அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சென்னை வேளச்சேரியில் அமேசானில் டெலிவரியில் பணி புரியும் நபர் கஞ்சா விற்பனை செய்வதாக வேளச்சேரி ஆய்வாளர் சந்திர மோகனுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அந்த நபரை கண்காணித்து, வேளச்சேரி நேருநகரில் உள்ள ரகுராம்(23), என்பவரது வீட்டில் வேளச்சேரி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் போலீசார் சோதனையிட்டதில் 1.5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில்

நேருநகரை சேர்ந்த தாமோதரன்(22), ஆலந்தூரை சேர்ந்த பாஸ்கர்(59), ஆகியவரிடம் இருந்து கஞ்சா வாங்கியதாக கொடுத்த தகவலின் பேரில் மூவரையும் கைது செய்தனர், தாமோதரன் ஆன்லைன் உணவு நிறுவனத்தில் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். மூவர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story