திருவான்மியூர் ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் கோர்ட்டில் சரண்

திருவான்மியூர் ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் கோர்ட்டில் சரண்
X

ரவுடி ஓலை சரவணன் கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

திருவான்மியூர் ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்டஇருவர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

சென்னை திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி அருகே ரவுடி ஓலை சரவணன்(வயது31), என்பவர் மர்ம நபர்கள் இருவரால் நேற்று மாலை 7 மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வீட்டில் இருந்து தனது மனைவியோடு காவலர் குடியிருப்பு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த நபர்கள் மனைவி கண்முன்னே தலை மற்றும் கழுத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர். கொலை செய்ய வருவதை முன் கூட்டியே அறிந்து கொண்ட சரவணன் மனைவியை தள்ளி விட்டு காப்பாற்றியதாக மனைவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஓலை சரவணன் மனைவி திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி கொலையாளிகளை தேடினர்.

நீலாங்கரை உதவி ஆணையர் சுதர்சன் மற்றும் அடையார் உதவி ஆணையர் நெல்சன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பியோடியவர்களை தேடி வந்த நிலையில், கொலை செய்த அடையார் மல்லிகை பூ நகரை சேர்ந்த ராஜதுரை(26), கோல்டு ராஜ்குமார்(24), ஆகிய இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

ஏற்கனவே நடந்த கொலை ஒன்றிற்காக பழிக்கு பழியாக கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருவான்மியூர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா