திருவான்மியூர்: கடன் தொல்லையால் கார் ஓட்டுநர் தற்கொலை

திருவான்மியூர்: கடன் தொல்லையால் கார் ஓட்டுநர்  தற்கொலை
X

பார்த்திபன்

திருவான்மியூரில் கடன் தொல்லையால் கார் ஓட்டுநர் மாமியார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் பார்த்திபன், சொந்தமாக கார் ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி ஷாலினி இரண்டாவது பிரவசத்திற்காக திருவான்மியூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.
கடந்த வாரம் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்ப்பதற்காக திருவான்மியூர் பெரியார் நகரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு பார்த்திபன் வந்துள்ளார். அப்போது குடி பழக்கத்திற்கு அடிமையான பார்த்திபன் குடித்து விட்டு தனது பர்ஸ், பணம், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை தொலைத்துவிட்டதால், மனைவி ஷாலினி அவரை திட்டியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பலரிடம் அதிகளவில் கடன் பெற்று திருப்பி கொடுக்காமல் இருந்த பார்த்திபனை கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்த நிலையில், கையில் இருந்த பணமும் தொலைந்ததால், மனமுடைந்த பார்த்திபன் தனது மாமியார் வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த திருவான்மியூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
பிஸிக்ஸ், தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை தெரிஞ்சிக்கலாம் வாங்க