சாலையில் கிடந்த நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்த இளைஞர்கள்

சென்னை பெரும்பாக்கம் சாலையில் கிடந்த ரூ.2 லட்சம் மதிப்புடைய 5 சவரன் தங்கநகைகளை சாப்ட்வேர் இன்ஜினியர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

விழுப்புரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (26), திண்டுக்கல்லை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (24). இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள். சோழிங்கநல்லுாரில் உள்ள தனியார் ஐ.டி.நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

பெரும்பாக்கத்தில் ஒரு விடுதியில் தங்கி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை பணி முடித்து இருவரும் மோட்டர் சைக்கிளில் தாங்கள் விடுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனை அருகில் உள்ள ஒரு கடையில் டீ குடிக்க சென்றனர்.

அவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிள் அருகே வந்த போது, சாலையோரம் தங்க நகைகள் சிதறிக்கிடந்தன. அதில் மூன்று சவரன் செயின், ஒரு சவரன் பிரேஸ்லெட், இரண்டு மோதிரம் இருந்தது. அவற்றை எடுத்த சாப்ட்வேர் இன்ஜினியர்கள், நேராக பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சாலையில் கிடந்த தங்க நகைகளை எடுத்துவந்து நேர்மையாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்களை போலீசார் பாராட்டினர்.

Tags

Next Story
why is ai important to the future