திருவான்மியூரில் மனைவி கண் முன்னே ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை

திருவான்மியூரில் மனைவி கண் முன்னே ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை
X

கொலை செய்யப்பட்ட ரவுடி ஓலை சரவணன்.

Crime News in Tamil-சென்னை திருவான்மியூரில் மனைவி கண் முன்னே ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Crime News in Tamil-சென்னை திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி அருகே ரவுடி ஓலை சரவணன்(35) என்பவர் மர்ம நபர்கள் இருவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வீட்டில் இருந்து தனது மனைவியோடு நடந்து காவல் குடியிருப்பு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர்.

இது குறித்து ஓலை சரவணன் மனைவி திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ஓலை சரவணன் சமீபத்தில் தான் வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!