சென்னை வேளச்சேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்து அறுப்பு

சென்னை வேளச்சேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்து அறுப்பு
X

சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த இளைஞரின் உருவ படம்.

சென்னை வேளச்சேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை வேளச்சேரி, எம்.ஜி.ஆர்.நகர், 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கல்பனா(எ) அலமேலு(30), இவர் தனது பிள்ளைகள் இருவரை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் தனியாக படுத்திருந்தார்.

அப்போது யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கல்பனாவின் கழுத்தை அறுத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பள்ளியில் இருந்து பிள்ளைகளை அழைத்து வர மதியம் தாய் வராததால் பள்ளியில் இருந்து ரமேஷிற்கு தகவல் தெரிவித்துள்ளார். ரமேஷ் அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்து பார்ததில் கழுத்து அறுபட்டு இருந்துள்ளார்.

அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் இராயபேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கழுத்தில் 8 தையலும், ஆள்காட்டி விரலில் 3 தையலும், நடுவிரலில் 1 தையலும் போடப்பட்டுள்ள்து.சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றிய வேளச்சேரி போலீசார் சைக்கோ நபரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story