பங்கு சந்தையில் முதலீடு மோசடி செய்த உணவக ஊழியரை கடத்திய நபர்களில் இருவர் கைது

பங்கு சந்தையில் முதலீடு  மோசடி செய்த உணவக ஊழியரை கடத்திய நபர்களில் இருவர் கைது
X

பைல் படம்

பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக 39 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றியதால் உணவக ஊழியரை கடத்தியவர்களில் இருவர் கைது

பங்கு சந்தையில் முதலீடு செய்வதாகக்கூறி 39 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிய உணவக ஊழியரை கடத்திய நபர்களில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வில்லிவாக்கத்தில் தங்கி உணவகத்தில் வேலை பார்த்து வருபவர் சீதாராமன்(58), இவரது சொந்த ஊர் திருநெல்வேலி அங்கு பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பார்க்கலாம் என கூறி ராமகுருநாதன்(34), என்பவரிடம் 39 லட்ச ரூபாய் பணத்தை கடந்த வருடம் வாங்கியுள்ளார்.

பணத்தை வாங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் திருப்பி தராமலும், உரிய பதிலளிக்காமலும், செல்போன் அழைப்பை ஏற்காமல் தவிர்த்து வந்துள்ளார்.இதனால் ராமகுருநாதன் வழக்கறிஞர் ஒருவரை நாடியுள்ளார். அவர் பணம் வாங்கியதற்கு ஏதேனும் ஆவணம் உள்ளதா என கேட்டுள்ளார். அதற்கு இல்லை என்று பதிலளிக்க வழக்கறிஞர் பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதனை கேட்ட ராமகுருநாதன் காரில் 8 பேருடன் வந்து வில்லிவாக்கத்தில் இருந்து சீதாராமன் தனது மகனை பார்க்க கடந்த 18ம் தேதி ஆதம்பாக்கம் ஏஜிஎஸ் காலனிக்கு வந்த போது கடத்திச்சென்று அடித்து துன்புறுத்தி வெற்று பத்திரத்தில் கையொப்பம் வாங்கிக் கொண்டு வேளச்சேரி அருகே இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து சீதாராமன், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஒருவருக்கு வீடியோ பதிவு செய்து அனுப்பியுள்கார். பின்னர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் ஆதம்பாக்கம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் திருநெல்வேலியை சேர்ந்த ராமகுருநாதன், கார் ஓட்டுநர் சதீஷ்குமார்(30), ஆகிய இருவரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.பின்னர் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
செவ்வாழை பழத்தில இவ்ளோ சத்து இருக்கா..? அப்படி என்ன தான் இருக்கு பார்ப்போமா..!