'இன்ஸ்டாநியூஸ் செய்தி' எதிரொலி: பழுதடைந்த சாலைக்கு விமோசனம்

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த சாலைக்கு விமோசனம்
X
வேளச்சேரியில் நடைபெறும் சாலை சீரமைப்பு பணிகள்.
இன்ஸ்டா நியூஸ் செய்தி வெளியிட்ட நிலையில், வேளச்சேரியில் சிதிலமடைந்த சாலை சீரமைக்கும் பணி துவங்கியது.

சென்னை வேளச்சேரி பிரதான சாலை, வேளச்சேரி காவல் நிலையம் அருகே, படுமோசமான நிலையில் காணப்பட்டது. சிதிலமடைந்த சாலையினால் புழுதி பறந்து காவல் நிலையத்தில் படர்ந்து இருந்தது. அதுமட்டுமல்லாமல் அவ்வழியே சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகினர். அவ்வப்போது விபத்துகளும் நிகழ்ந்து வந்தது. அப்பகுதி மக்களும் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்து வந்தனர்.

இது குறித்து, நமது இன்ஸ்டா நியூஸ் கடந்த 23ம் தேதி செய்தி வெளியிட்டு இருந்தது. இச்செய்தி எதிரொலியாக, சிதிலமடைந்த சாலையை சீரமைக்கும் பணியானது, நேற்றுதொடங்கி நடந்து வருகிறது. பொதுமக்களும், புழுதியில் படர்ந்து அவதியுற்று வந்த காவல்துறையினரும், இன்ஸ்டா நியூஸ் இணையதளத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!