வேளச்சேரியில் ரேசன் கடையில் புகுந்த மழைநீர் : அரிசி மூட்டைகள் சேதம்

வேளச்சேரியில் ரேசன் கடையில் புகுந்த மழைநீர் : அரிசி மூட்டைகள் சேதம்
X

வேளச்சேரியில் ரேஷன் கடைக்குள் புகுந்த மழை நீர்.

வேளச்சேரியில் ரேஷன்கடையில் புகுந்த மழை நீரால் அரிசி மூட்டைகள் சேதமடைந்தன.

சென்னை வேளச்சேரி 178 வார்டுக்குட்பட்ட, பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ரேசன் கடையில் விடிய விடிய பெய்த கன மழையினால் அப்பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது.

அப்பகுதியில் மழை நீர் தேங்கி கழிவு நீர்கால்வாய் நிரம்பி மழை நீருடன் கலந்து சென்று வருவதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் அப்பகுதியில் இயங்கி வரும் ரேசன் கடையில் மழை நீர் புகுந்துள்ளதால் கடையின் ஊழியர்கள் உள்ள இருக்கும் அரிசி பருப்பு உள்ளிட்ட மூட்டைகளை வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தினர்.

பல ஆண்டுகளாக மாற்று இடம் இல்லாததால் மழை நீரில் அரிசி மூட்டைகள் சேதமடைந்தது. இந்த பகுதியில் சுமார் 2000 குடும்பங்களுக்கு இங்கு தான் ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடைக்கு ரேசன் பொருட்களை வாங்க வருகை தரும் பொதுமக்களை மழை நீர் தேங்குவதால் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!