தி.மு.க. பிரமுகர்கள் புதிதாக திறக்கும் மதுக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு

தி.மு.க. பிரமுகர்கள் புதிதாக திறக்கும் மதுக்கடைக்கு  மக்கள் எதிர்ப்பு
X

தி.மு.க. பிரமுகர்கள் மது பான கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்புி தெரிவித்தனர்.

தி.மு.க. பிரமுகர்கள் புதிதாக திறக்கும் மதுக்கடைக்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

சென்னை வேளச்சேரி புவனேஸ்வரி நகர் 3வது பிரதான சாலையில் புதிதாக மதுபானக்கூடத்தை 175 வது வார்டு தி.மு.க. கவுன்சிலரின் கணவர் முருகவேல் மற்றும் தி.மு.க .பகுதி செயலாளர் சு.சேகர் ஆகியோர் இணைந்து கட்டி வருகின்றனர்.

இதனை எதிர்த்து நலச்சங்கத்தினர் நீதிமன்றத்தை நாட ஆட்சியர் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளார்.இதற்கிடையே மதுபானக்கூடத்தை கட்டும் முயற்சியில் தி.மு.க. கவுன்சிலரின் கணவர் முருகவேல் ஈடுபட்டு வருகின்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புவனேஸ்வரி நகர் நலசங்க நிர்வாகிகள், பொதுமக்கள் மதுபானக்கூடம் கட்டும் இடத்தில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அவர்களிடம் ஈடுபட்டு சட்ட ரீதியாக கையாளுமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு போராட்டகாரர்கள் வழக்கு போட்டுள்ளதாக எடுத்துரைத்தனர்.

இந்நிலையில் தி.மு.க. பிரமுகர்கள் அந்த இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் போலீசார் சமாதானம் செய்து போராட்டத்தை கைவிட வைத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!