சென்னை வேளச்சேரியில் ஈ.பி.எஸ்.சை அ.தி.மு.க.விற்கு தலைமையேற்குமாறு சுவரொட்டி

சென்னை வேளச்சேரியில் ஈ.பி.எஸ்.சை அ.தி.மு.க.விற்கு தலைமையேற்குமாறு சுவரொட்டி
X

சென்னை வேளச்சேரியில் இ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.

சென்னை வேளச்சேரியில் ஈ.பி.எஸ்.சை அ.தி.மு.க.விற்கு தலைமையேற்குமாறு வலியுறுத்தி சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒன்றை தலைமை பிரச்சினை குறித்து பேசப்பட்டது முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். இருவருக்கும் ஆதரவாக அவரவர் ஆதரவாளர்கள் கட்சிக்கு தலைமையேற்குமாறு சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்டம் சார்பில் வேளச்சேரி தொகுதி முழுவதும் எடப்பாடி கே. பழனிசாமியின் படத்தை நடுவில் போட்டும், வலது பக்கம் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா படமும், இடது புறம் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் படமும் வைத்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் "தலைவா வா! தலைமையேற்க வா!!" என்ற வாசகங்களும் அச்சடிக்கப்பட்டுள்ளன.

அதில் கட்சிக்காரர்கள் பெயரோ, படமோ போடப்படாத நிலையில் எடப்பாடி கே. பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளரான அம்மா பேரவை மாநில துணை செயலாளர் வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தியால் ஒட்டப்பட்டிருப்பதாக அ.தி.மு.க.வினர் பேசிக் கொள்கின்றனர்.

Tags

Next Story
ai powered agriculture