திருவான்மியூரில் அருகே பங்கு வர்த்தகம் செய்து வந்த நபர் காருடன் கடத்தல்

திருவான்மியூரில் அருகே பங்கு வர்த்தகம் செய்து வந்த நபர் காருடன்  கடத்தல்
X

திருவான்மியூர் போலீஸாரால் மீட்கப்பட்ட கார்

சென்னை அண்ணாநகரை சேர்ந்த சந்திரசேகர்(45) கடந்த 5 ஆண்டுகளாக பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து தொழில் செய்து வருகிறார்

திருவான்மியூரில் அருகே பங்கு வர்த்தகம் செய்து வந்த நபர் காரில் வந்த போது ஓட்டுநரை அடித்து விரட்டி விட்டு காரோடு கடத்தல்.

சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் சந்திரசேகர்(45), இவர் கடந்த 5 ஆண்டுகளாக பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து தொழில் செய்து வருகிறார். பல பேரிடம் பணம் வாங்கியும் முதலீடு செய்து உள்ளார்.அதே போல் அவரது நண்பர் சுரேஷ்குமார்(31), என்பவருன் முதலீடு செய்துள்ளார்.பணத்தை இரண்டாடாக திருப்பி தராரதாலும், அழைப்பை ஏற்காததாலும், நேற்று இரவு திருவான்மியூர் காமராஜ் நகர் அருகே காரை வழிமறித்து ஓட்டுநர் விஜயராஜ் என்பவரை அடித்து துரத்தி விட்டு சந்திர சேகரை காரோடு கடத்தி விட்டனர்.

இது தொடர்பாக விஜயராஜ், சந்திரசேகர் மனைவிக்கு தகவல் கொடுத்து அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.அண்ணா நகர் போலீசார் திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்து காரை பிடிக்க உத்தரவிட்டனர். அதன் பேரில் தாம்பரம் அருகே கடத்தல் காரையும், கடத்தப்பட்ட நபரையும் போலீசார் மீட்டனர்.சந்திரசேகரை கடத்திய சுரேஷ் குமார், மற்றும் பிரகாஷ்(34), ஆகிய இருவரை போலீசார் கைது செய்து இரு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் சந்திரசேகரிடம் கடந்த 2020 -


ஆம் ஆண்டு சுரேஷ்குமார் 15 லட்ச ரூபாயை வர்த்தகம் செய்ய கொடுத்து திருப்பி தராததால் கடத்தியதாக தகவல்.திருவான்மியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!