இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர் கைது

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர் கைது
X

கைது செய்யப்பட்ட சந்தோஷ்.

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை நங்கநல்லுார் பகுதியை சேர்ந்தவர் சுதா(29), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த10ம் தேதி இரவு, 9 மணிக்கு, வேளச்சேரி, எம்.ஆர்.டி.எஸ்., சாலையில் நடைபயிற்சி முடித்து, இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அதே சாலையில், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர், சுதாவின் வாகனத்தை ஒட்டி நிறுத்தி, மடிப்பாக்கம் செல்ல முகவரி கேட்டுள்ளார். அப்போது திடீரென, அந்த நபர் உடம்பில் கை வைத்து, ஆபாசமாக நடந்து கொண்டார். இதில், அதிர்ச்சி அடைந்த சுதா வாகனத்துடன் கீழே விழுந்து மயக்கமடைந்தார்.

உடனே அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடினார். சுதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் வேளச்சேரி ஆய்வாளர் சந்திர மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, 120 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர் குறித்து விசாரித்தனர்.

விசாரணையில் பள்ளிக்கரணை, ராம்நகரை சேர்ந்த சந்தோஷ்(20), என தெரியவந்தது.இவரை கைது செய்த போலீசார், நீதிமன்றதில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!