கருணாநிதி பிறந்த நாள் கிரிக்கெட் போட்டிகள்: வேளச்சேரி அணி சாம்பியன்

கருணாநிதி  பிறந்த நாள்  கிரிக்கெட் போட்டிகள்: வேளச்சேரி அணி சாம்பியன்
X

வேளச்சேரியில் கலைஞரின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. முதல் பரிசை வென்ற வேளச்சேரி அணி 

Karunanidhi Birthday Cricket Match: Velachery Team Champion

வேளச்சேரியில் கலைஞரின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. முதல் பரிசை வேளச்சேரி அணி தட்டிச் சென்றது.

சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும் வழக்கறிஞருமான குமார் என்பவர் மறைந்த முன்னாள் முதல்வர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு 2ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டியை நடத்தினார்.

இதில் தமிழகம், கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டு விளையாடின, இரு தினங்களாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின், இறுதி ஆட்டத்தில் வேளச்சேரி அணியும், கர்நாடக அணியும் மோதின இதில் கர்நாடக அணி வெற்றி தோல்விடைந்து இரண்டாம் பரிசை வென்றது.கடைசி பந்தில் நான்கு ரன்கள் அடித்து வேளச்சேரி அணி வெற்றிக் கோப்பையையும், ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் தட்டிச் சென்றது.வெற்றி பெற்றவர்களுக்கு 177வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் வேளச்சேரி எஸ்.பாஸ்கர் அவர்கள் கோப்பையையும், பரிசுத் தொகையையும் வழங்கினார்.

Tags

Next Story