வேளச்சேரி ஏரிக்கரை நடைபாதை : பராமரிப்பின்றி காணப்படும் அவலம்

வேளச்சேரி ஏரிக்கரை நடைபாதை : பராமரிப்பின்றி காணப்படும் அவலம்
X

சேதமடைந்து காணப்படும் ஏரிக்கரை

வேளச்சேரி ஏரிக்கரையை ஒட்டியுள்ள நடைபாதை புதர்மண்டி காணப்படுகிறது. சீர் செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை வேளச்சேரி, மருதுபாண்டி சாலை, ஏரிக்கரையை ஒட்டி பொது மக்களின் பயன்பாட்டிற்காக நடைபாதை ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த நடைபாதையை சில வருடங்களாக, பொது மக்கள், முதியவர்கள், பெண்கள் என நடைபயிற்சி மேற்கொள்ள பயன்படுத்தி வந்தனர். சில மாதங்களாக முறையான பராமரிப்பின்றி பக்கவாட்டு சுவர் இடிந்து விழும் ஆபத்தான நிலையிலும், நடைபாதை முழுவதும் செடி கொடிகள் படர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சமூக விரோதிகள் அங்கேயே மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுப்பணித்துறை, மாநகராட்சி நிர்வாகம் இணைந்து ஏரியை ஒட்டியுள்ள நடைபாதையை சீரமைத்து மீண்டும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர்களை காவல் துறையினர் கண்டிப்பிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story